Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தைராய்டு பாதிப்பிற்கு மாத்திரை சாப்பிடுறீங்களா? அப்போ இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!!

இந்த காலத்தில் பெண்கள் பெரும்பாலானோர் தைராய்டு பாதிப்பை சந்திக்கின்றனர்.தைராய்டு பாதிப்பின் காரணமாக கருவுறுதல் தள்ளிப்போவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.தைராய்டு பாதிப்பு இருந்தால் மனச்சோர்வு,மாதவிடாய் பிரச்சனை,சரும வறட்சி,உடல் எடை அதிகமாதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

தைராய்டில் ஹைப்பர் மற்றும் ஹைப்போ என்று இரு வகைகள் இருக்கிறது.இதில் தைராய்டு அதிகமாக சுரப்பதால் ஹைப்பர் தைராய்டு பாதிப்பும் தைராய்டு குறைவாக சுரப்பதால் ஹைப்போ தைராய்டு பாதிப்பும் ஏற்படுகிறது.

இந்த இரண்டு பாதிப்புகளும் உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.ஆண்களைவிட பெண்களுக்குதான் இந்த தைராய்டு பிரச்சனை பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.

தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் மாத்திரை சாப்பிட்டு அதை கட்டுப்பாட்டில் வைக்கின்றனர்.ஆனால் இப்படி தைராய்டு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் சில விஷயங்களை செய்தால் மாத்திரையின் பலன் குறைந்துவிடும்.

தைராய்டு மாத்திரை எடுத்துக் கொள்ளும் சமயத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

நீங்கள் தைராய்டு மாத்திரை சாப்பிடும் பொழுது கால்சியம் சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

முள்ளங்கி,முட்டைகோஸ் போன்ற உணவுகளை உட்கொண்ட பிறகு தைராய்டு மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதேபோல் சோயாவில் செய்யப்படும் பால்,பன்னீர்,சீஸ் போன்றவற்றை தைராய்டு மாத்திரை சாப்பிடுபவர்கள் தவிர்க்க வேண்டும்.

காஃபின் நிறைந்த பானங்கள் மற்றும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.வறுத்த,பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.பதப்படுத்தப்பட்ட உணவுகளை தைராய்டு மாத்திரை சாப்பிடுபவர்கள் தவிர்க்க வேண்டும்.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் மது பழக்கத்தை கைவிட வேண்டும்.தைராய்டு மாத்திரையை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்.

Exit mobile version