காலில் கருப்பு கயிறு கட்டி உள்ளவர்களா நீங்கள்?? அதனால் என்ன நேரும் என்று தெரியுமா??

0
84
Are you the one with the black rope on your leg?? So you know what will happen??

காலில் கருப்பு கயிறு கட்டி உள்ளவர்களா நீங்கள்?? அதனால் என்ன நேரும் என்று தெரியுமா?? 

சிலருக்கு உடல்நிலை முடியாமல் போனால் காலில் முடியால் செய்யப்பட்ட கருப்பு கயிறு அணிவது உண்டு. இவ்வாறு செய்தால் கண் திருஷ்டி நீங்கும் என்பது ஐதீகம். காலில் மட்டுமல்ல, சிலர் கை மற்றும் இடுப்பில் கூட இந்த வகையான கருப்பு கயிறு அணிவது உண்டு.

இருளில் தீய சக்திகள் நிறைந்து காணப்படும். எனவே கருப்பு கயிறு கட்டுவதால் தீய சக்திகளை கருமை நிறம் அண்டாமல் விரட்டி அடித்து விடும் என்று நம்பப்பட்டு வருகிறது. இந்த காரணம் மட்டும் இல்லாமல் பொதுவாக சனி பகவான் ஒருவரை ஆக்கிரமிக்க வேண்டும் எனில் அவரின் கால்களை தான் முதலில் பற்றுவார். எனவே காலில் கருப்பு கயிறு அணிவதன் மூலம் சனி தோஷம் நீங்கும் என்பதுடன் ராகு, கேது பாதிப்புகளும் நீங்கிவிடும்.

அது மட்டும் இல்லாமல் காலில் கருப்பு கயிறு கட்டுவதற்கு முன்னால் சனி தேவ மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும்.

பொதுவாக காலில் கருப்பு கயிறு கட்டுவதால் ஏற்படும் சில பலன்களை பார்ப்போம்.

** ஜோதிட சாஸ்திரத்தின் படி காலில் கருப்பு கயிறு அணிவதால் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்களின் பலன்கள் நமக்கு கிடைக்கும்.

** காலில் கருப்பு கயிறு கட்டிக் கொள்வதால் தீய சக்திகள் நம்மை அண்டாமல் விலகி விடும். அதுமட்டுமில்லாமல் நமக்கு கெடுதல் தரக்கூடிய பிறரின் கண் திருஷ்டியும் நீங்கிவிடும்.

** நமது எதிரிகள் மற்றும் நமது வளர்ச்சி பிடிக்காதவர்களால் நம் மீது ஏவப்படும் பில்லி, சூனியம், செய்வினை, போன்ற துஷ்ட சக்திகளிடம் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.

** சனிபகவானின் கெடுபலன் மற்றும் பார்வை வேகத்தை இந்த கருப்பு கயிறு கட்டுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் குறைக்கவும் செய்கிறது.

** இந்தக் கருப்பு கயிறை சனிக்கிழமைகளில் கட்டிக் கொள்வது மிகவும் விசேஷமானது. அதுவும் பிரம்ம முகூர்த்தத்தில் கொள்ளலாம்,  அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டிக் கொள்ளலாம்.

**இந்த கருப்பு கயிறு நாம் கட்டி இருப்பதால் நாம் அறியாமல் நமக்கு விபத்து ஏற்பட்டாலும் பெரிய உடல் நல பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். உடல் ஆரோக்கிய கோளாறுகள் உள்ளவர்கள் அனுமன் கோவிலில் வைத்து கருப்பு கயிறு கட்டிக் கொள்வதால் நலம் பெறலாம்.

** எதிர்மறை மற்றும் துஷ்ட சக்திகளிடமிருந்து நம்மை பாதுகாக்கும் இந்த கயிறை பருவமடைந்த பெண்கள் தங்கள் காலில் கட்டிக் கொள்வதன் மூலம் பயம் மற்றும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

** பொதுவாக கருப்பு கயிறை பெண்கள் இடது காலிலும், ஆண்கள் வலது காலிலும் கட்ட வேண்டும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. கயிறை கட்டும் போது முடிச்சுகள் போட்டு கட்ட வேண்டும்.

** காலில் கருப்பு கயிறு அணிந்தவர்கள் மற்ற நிற கயிறுகளை அணியக்கூடாது.

** ஒற்றைப்படை எண்களை கொண்டு அதாவது 3,5,7,9, என்ற எண்ணிக்கையில் முடிச்சுகளை போட்டு காலில் கயிறு அணிய வேண்டும். நவகிரகங்களின் ஆதிக்கம் படி ஒன்பது முடிச்சுகளுடன் கட்டுவது நல்லது.

** காலில் கயிறு கட்டும் பொழுது ஓம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த கயிற்றினை குறைந்தபட்சம் 48 நாட்கள் கட்ட வேண்டும். அதன் பின்னர் வேறு கயிறு மாற்ற வேண்டும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.