மழைக்காலம் முடிந்து தற்பொழுது குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது.அதிகாலை நேரத்தில் அதிக குளிராக இருப்பதால் ஸ்வெட்டர்,ஜாக்கெட் போன்ற கதகதப்பை உணர வைக்கும் ஆடைகளை அணிகின்றோம்.
ஆனால் நீங்கள் வழக்கத்தை விட அதிக குளிரை உணர்கிறீர்கள் என்றால் அலட்சியம் கொள்ளாதீர்கள்.இது உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.நமது உடல் சீராக இயங்குவதில் ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் வைட்டமின் B 12,இரும்புச்சத்து,போலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைபாடு இருந்தால் நீங்கள் அதிக குளிரை உணர்வீர்கள்.
மேலும் வைரஸ் பாக்டீரியா தொற்று,அதிக வெப்பநிலை,வைட்டமின் குறைபாடு போன்ற காரணங்களால் அதிகம் குளிர்வது போன்ற உணர்வு ஏற்படும்.இரும்புச்சத்து உடலில் இரத்த சிவப்பணுக்களின் அதிகம் காணப்படுகிறது.இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடலுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காது.இதனால் தசைகள் வெப்பத்தை உற்பத்தி செய்யாமல் போகும்.அதேபோல் இரும்புச்சத்து குறைந்தால் இரத்த சோகை ஏற்படும்.இதனால் உடலில் வழக்கத்தை விட குளிரை உணர்வீர்கள்.
அதேபோல் வைட்டமின் பி12,போலேட்,வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்து குறைபாடு காணப்பட்டாலும் அதிக குளிரை உணரக்கூடும்.இதனால் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.ஊட்டச்சத்து குறைபாட்டை கண்டறிய மருத்துவரை அணுகலாம்.