பல்வேறு மக்களினுடைய வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வங்கிகளின் மூலம் வழங்கப்படும் வீட்டு கடன்களின் வாயிலாகவே நிறைவேறி இருக்கிறது. அவ்வாறு வங்கியில் கடன் பெற்று வீட்டு கடனை திருப்பி செலுத்திக் கொண்டிருக்கும் பயனாளர்கள் வட்டி அதிகமாக உள்ளது என்று வீட்டுக் கடனை பேர் ஒரு வங்கிக்கு மாற்றும் பொழுது சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
வீட்டு கடன் பெறுதலில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் :-
✓ வீட்டுக் கடன் பெறும்போது செயலாக்க கட்டணத்தை கவனித்தல் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த செயலாக கட்டணமானது 0.5% முதல் 2% இருக்க வேண்டும்.
✓ சில நேரங்களில் வீட்டு கடனை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றும் பொழுது இந்த செயலாக்கு கட்டணமானது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி சில வங்கிகள் வீட்டுக் கடனை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றும் பொழுது தள்ளுபடி செய்கின்றன.
✓ வீட்டுக் கடன் பெற்றிருக்கும் வங்கியை விட வட்டியானது குறைவாக இருக்கக்கூடிய வங்கிகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் வீட்டுக் கடன் கட்டுவதில் பயனர்களுக்கு பலன் கிடைக்கும்.
✓ குறிப்பாக வீட்டுக் கடனை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்ற நினைப்பவர்கள் பழைய வங்கியில் வீட்டு கடன் தானே களை முறையாக செலுத்தி இருத்தல் அவசியம். அவ்வாறு சிறந்த தவறு இருக்கும் பட்சத்தில் புதிதாக ஒரு வங்கியில் வீட்டுக் கடனை மாற்றுவது என்பது இயலாத காரியம்.