படித்து முடித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பவரா நீங்கள்? உங்களுக்கு ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும்!! எப்படி என்று தெரியுமா?
இன்றைய உலகில் உரிய படிப்பிற்கு வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது.படித்தவர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பை தேடி கண்டுபிடிப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது.இந்நிலையில் 10 அல்லது அதற்கு மேலான படிப்புகளை முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.
நீங்கள் மாற்றுத்திறனாளியாக இருந்தால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு முடிருந்தால் போதும்.மற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் பூர்த்திடயடைந்து இருக்க வேண்டும்.
உதவித்தொகை பெற இருக்க வேண்டிய தகுதிகள்:
1)உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து புதுப்பித்தவராக இருக்க வேண்டும்.
2)ST பிரிவை சேர்ந்தவர்களுக்கான வயது வரம்பு 45 என்றும் இதர பிரிவினருக்கு வயது வரம்பு 40 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்குறது.
3)உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மனுதாரர் வேலைவாய்ப்பில் ஈடுபடாதவராக இருத்தல் வேண்டும்.
4)குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750 மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.இந்த உதவித்தொகை உங்கள் வங்கி கணக்கில் காலாண்டிற்கு ஒருமுறை வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து வேலையில்லா இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.
உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?
தேவைப்படும் ஆவணங்கள்:
1)கல்விச்சான்றுகள்
2)வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை
3)ரேசன் கார்டு
4)வங்கி பாஸ் புக்
5)அடையாள அட்டை
முதலில் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜெராக்ஸ் எடுத்து பூர்த்தி செய்யவும்.பிறகு கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து வேலை நாட்களில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.பின்னர் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பின்னர் உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் உதவித்தொகை பெற்று வரும் நபர்கள் உரிய காலத்தில் தங்கள் வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.