Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரேஷன் பாமாயில் எண்ணெயை யூஸ் பண்றவங்களா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே!!

#image_title

ரேஷன் பாமாயில் எண்ணெயை யூஸ் பண்றவங்களா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே!!

ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கொடுக்கப்பட்டு வரும் பாமாயிலை நம்மில் ஒரு சிலர் பயன் படுத்துவதில்லை. ஆனால் பெரும்பாலானோர் இந்த எண்ணெயில் அப்பளம், வடை இது போன்ற பலகாரங்கள் செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் அதிகளவு பித்தம் காணப்படுவதால் பெரும்பாலான மக்கள் இதனை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த பித்தம் நிறைந்த எண்ணெயை பயன்படுத்துவானதால் தலைச்சுற்றல், மயக்கம் போன்ற பிரச்சனைகள் வரும். அதுமட்டும் இன்றி இந்த பாமாயிலை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உடல் ஆரோக்கியம் பாதிப்பட்டு விடும்.

சமையலுக்கு பயன்படுத்தும் பாமாயில் எண்ணெயின் தீமைகள்:-

*இந்த எண்ணெயில் அதிகளவு கொழுப்பு சத்து நிறைந்து இருப்பதால் இதை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தோம் என்றால் உடல் பருமன் ஏற்பட்டு விடும். எனவே உடல் பருமனால் அவதிப்படும் நபர்கள் பாமாயிலை உபயோகிப்பதை தவிர்க்கவும்.

*இதயம் தொடர்பான பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் நபர்கள் இந்த பாமாயில் எண்ணெய் பயன்பாட்டை முழுவதுமாக தவிர்க்கவும். காரணம் இதில் உள்ள கொழுப்பு இரத்ததில் படிந்து மாரடைப்பு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்பை உருவாக்கி விடும்.

*வளர்சிதை மாற்ற நோய் பாதிப்பு இருப்பவர்கள் பாமாயில் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து விடவும். அதேபோல் பாமயிலை தொடர்ந்து உபயோகித்து வந்தால் வளர்சிதை நோய்களை உண்டு பண்ணும். பாமாயிலில் உள்ள பால்மிடிக் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடும்.

*பித்தத்தால் அவதிப்பட்டு வரும் நபர்கள் பாமாயில் அறவே தவிர்க்கவும். காரணம் இந்த எண்ணையில் அதிகளவு பித்தம் நிறைந்து இருக்கிறது.

Exit mobile version