Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!!

#image_title

குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள்!!

கடையில் பாலாடை (குழந்தைக்கு பாலூட்டும் சங்கு) ஒன்று வாங்கிக் கொள்ளவும். ஒரு வெள்ளிக் கிழமை அன்று இந்த பாலாடையைக் கழுவி மஞ்சள் குங்குமம் வைத்து நெய் அல்லது நல்லெண்ணெயை அதில் ஊற்றி 2 திரியை ஒன்றாக சேர்த்து பூஜை அறையில் தீபம் ஏற்றவும்.

இந்த தீபத்தை கணவன் மனைவி இருவரும் இணைந்து ஏற்ற வேண்டும். கணவன் பாலாடைக்கு தினமும் பூ வைக்க மனைவி விளக்கு ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் போது உங்கள் குல தெய்வம், இஷ்ட தெய்வம், முருகப் பெருமான் அனைவரையும் நினைத்து மனமுருக மனதார குழந்தை வரம் தாருங்கள் என்று வேண்டி தொடர்ந்து 48 நாட்களுக்கு நம்பிக்கையோடு தீபம் ஏற்றவும்.

இதனுடன், ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் முருகன் கோயலுக்கு சென்று 2 ஆரஞ்சுப் பழங்களை சாமிக்குப் படைத்து ஒரு பழத்தை பிரித்து சுளைகளை எடுத்து அங்குள்ள குழந்தைகளுக்கு அல்லது பிறருக்கு கொடுக்கவும்.

மற்றொரு பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்து கணவன் மனைவி இருவரும் சாப்பிடவும். முடிந்தவர்கள் அங்கு இரண்டு நெய் தீபம் ஏற்றினால் இன்னும் சிறப்பு.

இதை முழு நம்பிக்கையோடு செய்து வர நிச்சயம் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும்.

Exit mobile version