Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைக்க முடியாமல் கவலையா?? இதை குடிச்சி பாருங்க ஸ்லிம் ஆகிடுவீங்க!!

பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை குறைக்க முடியாமல் கவலையா?? இதை குடிச்சி பாருங்க ஸ்லிம் ஆகிடுவீங்க!!

தற்போது உள்ள காலகட்டத்தில் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைக்க முடியாமல் பெண்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குழந்தைக்கு பால் ஊட்டுதல்,தூக்கமின்மை எதிர்கால திட்டமிடல் இதற்கிடையில் எடையை குறைப்பது பற்றி பெரும்பாலும் அக்கறை கொள்வது இல்லை.

முந்தைய காலத்தில் பிரசவத்திற்கு பிறகு தொப்பையை குறைக்க மெல்லிய துணியால் வயிறு கட்டுவார்கள்.இதனால் கருப்பை சுருங்க சுருங்க வயிறு தசை தொங்காமல் சுருங்கிவிடும்.

ஆனால் இப்பொழுது சுகப்பிரசவம் ஆனாலும் செய்வதில்லை. மற்றும் சிசேரியனாலும் துணியை இறுக கட்ட முடியாமல் வயிறு தொங்கி விடுகிறது. எனவே உடற்பயிற்சி மற்றும் உணவு முறை மாற்றம், சரியான தூக்கம் ஆகியவற்றினால் தொப்பையை குறைத்து பழைய நிலைக்கு வர முடியும். ஆனால் கடுமையான டயட் முறைகளை பாலோவ் பண்ணினால் மோசமான நிலையை தான் அடைய முடியும். எனவே பின்வரும் பானகத்தை குடித்து பிரசவத்திற்கு பின் ஏற்படும் தொப்பையை இயற்கையாக குறைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையானவை:

1.மிதமான சுடு தண்ணீர்

2. எலுமிச்சை

3. தேன்

செய்முறை:

மிதமான சுடு தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எலுமிச்சை பழச்சாறு பிழிய வேண்டும் அதனுடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அளவு தேன் கலக்க வேண்டும். இதை தினமும் காலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் தொப்பை இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து ஸ்லிம் ஆகிவிடுவீர்கள். மேலும் இதை சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் செய்த பெண்கள் பயன்படுத்தலாம்.

Exit mobile version