பெண்களுக்கு திருமணம் செய்ய இயலவில்லை என கவலையா??? இதோ பெற்றோர்களுக்காக தமிழக அரசின் அசத்தல் பரிசு!!
திருமணம் செய்ய இயலாத ஏழை பெண்களுக்காக உதவிடும் வகையில் தமிழக அரசு சூப்பரான திட்டம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி ஏழைப் பெண்களுக்கு திருமணத்தின் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகை திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே ஒரு கல்யாணம் என்றாலே பெண்ணைப் பெற்ற பெற்றோர்களுக்கு விழி பிதுங்கிவிடும். திருமண செலவு அவரவர் வசதிக்கேற்றவாறு திட்டமிட்டாலும் அதற்கு மேலே தான் இதுவரை செலவுகள் இழுத்து விடும். திருமண உடை சாப்பாடு தாலி மற்றும் இன்றியமையாத செலவுகள் செய்து தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்ய இயலாமல் நிறைய பெற்றோர்கள் வருத்தப்படும் நிகழ்வு ஏராளமான இடங்களில் நிகழ்ந்து கொண்டு வருகிறது. இவர்களுக்கு வரப்பிரசாதமாக தமிழக அரசு திருமண உதவித்தொகை திட்டங்களை முறையான வகையில் செயல்படுத்துகிறது.
எல்லா திட்டங்களையும் விட ஏழ்மையான ஆதரவற்ற பெண்களுக்கு திருமணத்திற்கு செயல்படுத்தப்படும் திட்டம் முன்னுரிமை பெற்று வருகிறது. இதில் குறிப்பாக கலப்புத் திருமணம், ஆதரவற்ற பெண்களுக்கு திருமணம், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழைப் பெற்றோர்களின் மகள்களின் திருமணம், மறுமணம் செய்து கொள்ளும் விதவைப் பெண்கள், மற்றும் விதவைப் பெண்களின் மகள்கள் , போன்றவர்களுக்கு உதவிடும் வகையில் அசத்தலான திட்டங்களை செயல்படுத்துகிறது.
இந்தத் திட்டத்தின் படி திருமணமானது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இலவசமாக நடத்தப்படும். கல்வி தகுதி இல்லாத பெண்களுக்கு ரூபாய் 25000 நிதியுதவி, 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் திருமணத்தின் போது வழங்கப்படும்.
இதில் ஹைலைட்டான விஷயமே சீர்வரிசைகள்தான். ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள கிரேடு ஏ மற்றும் கிரேடு -1 கோவில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு விண்ணப்பிக்கும் ஏழைப் பெண்களுக்கு இலவச திருமணம் நடத்தப்படுகிறது. சீர்வரிசையாக திருமாங்கல்யம் 4-கிராம் – 20000, மணமகன் ஆடை ஆயிரம் ரூபாய், மணமகள் ஆடை 2000 ரூபாய், திருமணத்தின் போது மணமகள் மற்றும் மணமகன் வீட்டார்களுக்கு 20 நபர்கள் வீதம் உணவு 2000 ரூபாய், மாலை, புஷ்பம் 1000 ரூபாய், பீரோ 7,800 ரூபாய், கட்டில் ஒன்று 7500 ரூபாய், மெத்தை 2200 ரூபாய், தலையணை 2-190 ரூபாய், பாய் ஒன்று 180 ரூபாய், கைக்கடிகாரம்-2 ஆயிரம் ரூபாய், மிக்ஸி-1 1490 ரூபாய், பூஜை பொருட்கள் மற்றும் திருமண சீர்வரிசை பாத்திரங்கள் 3640 என மொத்தமாக 50000 செலவில் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது.
ஏழைப் பெற்றோர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற வேண்டுமா?? அப்போ நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். திருமணம் செய்வதற்கு 21 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கோவில்களில் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். அத்துடன் முதல் திருமண சான்றிதழும் வழங்க வேண்டும். 18 வயது நிரம்பிய பெண்ணும், 21 வயது நிரம்பிய ஆணும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இதனுடன் வருமானச் சான்றிதழ் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 75 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். கூடவே எந்தப் பகுதியில் வசிக்கிறார்கள் என்பதற்கு சான்றாக காவல்துறையின் சான்றிதழ் மற்றும் மணமகன் மணமகளின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு மற்றும் கல்விச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.