உங்களில் சிலருக்கு அக்குள் பகுதியில் அதிகமாக வியர்வை வெளியேறும்.இது அதிகப்படியான துர்நாற்றத்திற்கு வழிவகுத்துவிடும்.இந்த துர்நாற்றத்தால் நீங்கள் அதிக அசௌகரிய சூழலை உணரலாம்.எனவே இந்த அக்குள் வாடையை கட்டுப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு வழி காணலாம்.
தீர்வு ஒன்று
நீங்கள் குளிக்கும் நீரில் ஒரு தக்காளி பழத்தை பிழிந்துவிட்டு பிறகு குளிக்கலாம்.இப்படி செய்வதால் அக்குள் வியர்வை நாற்றம் கட்டுப்படும். மற்றும் இரவு என இரு நேரம் குளித்தால் வியர்வை நாற்றத்தில் இருந்து தப்பிவிடலாம்.
தீர்வு இரண்டு
மஞ்சள் கிழங்கை உரசி தண்ணீரில் கலந்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் கட்டுப்படும்.
தீர்வு மூன்று
சிறிதளவு புதினா இலைகளை அரைத்து அக்குள் பகுதியில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்தால் வியர்வை நாற்றம் ஏற்படாது.
தீர்வு நான்கு
எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதனுள் சிறிது மஞ்சள் தூள் தடவி அக்குள் பகுதியில் வைத்து தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் வியர்வை நாற்றம் ஏற்படுவது கட்டுப்படும்.
தீர்வு ஐந்து
வேப்பிலை மற்றும் மஞ்சளை ஒன்றாக அரைத்து அக்குள் பகுதியில் தடவி சிறிது நேரம் உலரவிடவும்.பிறகு குளிர்ந்த நீரில் அக்குளை துடைத்தெடுக்கவும்.இப்படி தினமும் செய்து வந்தால் அக்குளில் இருந்து கெட்ட வாடை வராது.
தீர்வு ஆறு
ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடாவில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து அக்குளில் தடவி குளித்தால் வியர்வை கட்டுப்படும்.
தீர்வு ஏழு
குளிக்கும் நீரில் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குளித்தால் அக்குளில் வியர்வை நாற்றம் வருவது கட்டுப்படும்.