உங்கள் கை கால் நகங்களில் அழுக்கு படிந்திருக்கிறதா? ஆபத்து.. இந்த தவறை இனி செய்யாதீர்கள்!
கை மற்றும் கால்களில் உள்ள நகங்கள் மீது தனி அக்கறை செலுத்த வேண்டும்.நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறினால் பூஞ்சை தொற்று,நகசுத்தி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
நகங்களில் காயம் ஏற்படுதல்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல் போன்ற காரணங்களால் நக பாதிப்புகள் ஏற்படும்.நகங்களுக்குள் அழுக்கு படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இல்லையேல் அவை நமக்கு தீராத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.நகங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணமாக்கி கொள்ள வேண்டும்.இல்லையேல் அரிப்பு,சொறி,படை போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு நகத்தின் ஆரோக்கியத்தை முழுமையாக கெடுத்துவிடும்.
நமது உடலை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அதேபோல் தான் நகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நகங்களில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நகங்கள் வளர்ந்தால் அதில் அழுக்கு சேர்வதற்கு முன் வெட்டி விட வேண்டும்.
அழகு என்ற பெயரில் நகங்களை வளர்ப்பதினால் அவை பெரிய பாதிப்புகளை தான் ஏற்படுத்தும்.நகங்களை வெட்டிய பின் கை,கால்களை வெது வெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
நகங்களில் மேல் அழுக்கு படிந்தால் அதை முறையாக க்ளீன் செய்ய வேண்டும்.செயற்கை நகங்களை ஓடுவதை தவிர்க்க வேண்டும்.
நகங்களுக்கு நெயில் பாலிஷ் போடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.இதனால் நகங்களில் ஆரோக்கியம் முழுமையாக கெட்டுவிடும்.நகங்களில் அதிகளவு பூஞ்சை தொற்று ஏற்பட்டு விட்டால் உரிய மருத்துவ சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ள வேண்டும்.
கைகளை பயன்படுத்தி உணவு உட்கொள்வதால் நகத்தில் அழுக்கு,கிருமிகள் இருந்தால் அவை நேரடியாக உடலிற்கு செல்கிறது.இதனால் காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் உருவாகி விடும்.எனவே கை,கால் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.