Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உதடுகள் விரைவாக காய்ந்து விடுகின்றதா… ரோஜா இதழ்களை இப்படி பயன்படுத்துங்க… 

 

உதடுகள் விரைவாக காய்ந்து விடுகின்றதா… ரோஜா இதழ்களை இப்படி பயன்படுத்துங்க…

 

நம்மில் பலருக்கு வெயில் காலங்கள் மட்டுமில்லாமல் அனைத்து காலங்களிலும் உதடு வரண்டு வறட்சியடைந்து கருப்பாக மாறி இருக்கும்.

 

இந்த உதடுகள் கருப்பாக மாறுவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. புகை பிடித்தல், புகையிலை பயன்படுத்துதல், ஊட்டச்சத்து குறைதல், நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் போன்று பல காரணங்களினால் உதடு வறட்சி அடைந்து கருப்பாகி விடும்.

 

அதாவது உதடுகளில் இறந்த செல்கள் தங்கி இருக்கும். இந்த இறந்த செல்களை நாம் அடிக்கடி வெளியேற்றிவிட வேண்டும். அவ்வாறு இறந்த செல்களை வெளியேற்றவில்லை என்றால் சிவப்பாக இருக்கும் நமது உதடுகள் கருப்பாக மாறும்

 

அவ்வாறு கருப்பாக இருக்கும் உதடுகளை ரோஜா இதழ்களை வைத்து எவ்வாறு கருப்பாக இருக்கும் உதடுகளை சிவப்பாக மாற்றுவது என்று பார்க்கலாம்.

 

இதற்கு தேவையான பொருள்கள்…

 

* ரோஜா இதழ்கள்

* தேங்காய் பால்

* பாதாம் எண்ணெய்

 

செய்முறை…

 

ஒரு மிக்சி ஜாரில் ரோஜா இதழ்களை போட்டு அரைத்துக் கெள்ளவும். இதனுடன் தேங்காய் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கெள்ளவும்.

 

பின்னர் கருப்பாக இருக்கும் உதட்டின் மீது தடவ வேண்டும். பின்னர் 10 நிமிடங்களுக்கு அப்படியே வைத்துவிட்டு 10 நிமிடங்கள் முடிந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் உதடு கருமை நிறத்தில் இருந்து சிவப்பாக மாறி விடும்.

 

Exit mobile version