Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்க நகங்கள் இப்படி இருக்கா? இது அந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்!

Are your nails like this? It could be symptoms of that disease!

Are your nails like this? It could be symptoms of that disease!

உங்க நகங்கள் இப்படி இருக்கா? இது அந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்!

நமது உடலில் நோய் தொற்று வாய்,நாசி,கால் பாதம்,கண்கள் வழியாக பரவுவதை போல் கை,கால் நகங்கள் மூலம் எளிதில் பரவக் கூடும்.உங்களது முகத்தை அக்கறையோடு பரம்பரிப்பது போல் நகங்களையும் பரம்பரிப்பது அவசியமாகும்.

இன்றைய காலகட்டத்தில் நகங்களை வளர்ப்பது என்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது.ஆனால் நம் பள்ளி பருவத்தில் நகங்களை வெட்ட வேண்டும்,நகத்தில் அழுக்கு இருக்க கூடாது,கைகளை அடிக்கடி சோப் பயன்படுத்தி கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்று நமது ஆசிரியர்கள் நமக்கு அறிவுரைகள் வழங்கியிருப்பதை அனைவரும் நினைவு கூற வேண்டும்.

நாம் நகத்தை பராமரிக்க தவறுவதால் தொற்றுக் கிருமிகள் உடலுக்குள் எளிதில் அண்டிவிடுகிறது.அது மட்டுமின்றி நக சொத்தை,நக வெடிப்பு,நகத்தின் நிறம் மாறுதல் போன்றவை நிகழ்கின்றது.சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும்.இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய ஒரு பழக்கமாகும்.நமது நகத்தின் தன்மையை வைத்து உடலில் இருக்கின்ற நோய்களை கண்டறிய முடியும்.

கால் நகங்களில் கருப்பு கோடு, நகங்கள் அடிக்கடி உடைந்து போவது போன்றவை உடலில் உள்ள நகங்கள் உடைந்து காணப்படுதல் நமது உடலின் ஆரோக்கியமற்ற நிலையை குறிக்கிறது.

தைராய்டு பாதிப்பு இருப்பவர்களுக்கு அடிக்கடி நகம் உடைதல் ஏற்படும்.நகங்களில் கருப்பு கோடுகள் தென்பட்டால் அது உடலில் நோய் கிருமிகள் அதிகளவில் இருப்பதற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.பூஞ்சை தொற்று இருப்பவர்களுக்கு நாக சொத்தை ஏற்படும்.

அடிக்கடி நகங்களுக்கு நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்களின் நகங்கள் வலுவற்று விழுந்துவிடும்.நகங்களில் வெள்ளை திட்டுகள் காணப்பட்டால் அவை கால்சியம் குறைபாட்டிற்கான அறிகுறிகளாகும்.

நகங்களில் கருப்பு கோடுகள் காணப்பட்டால் அது உயிருக்கு ஆபத்தான புற்றுநோய்க்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

எனவே நக ஆரோக்கியத்திற்கு தினமும் கை மற்றும் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தமாக பராமரித்து வர வேண்டும்.நகங்கள் வறட்சியுடன் காணப்பட்டால் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்யலாம்.நகங்களை வளர விடாமல் அவ்வப்போது வெட்டிவிடுவது நல்லது.

Exit mobile version