Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமர்களமாக நடைபெறும் ஏரியா சபை கூட்டங்கள்!!

#image_title

சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமர்களமாக நடைபெறும் ஏரியா சபை கூட்டங்கள்!!

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளது இந்த வார்டுகளில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்துங்கள் என அரசு கூறியுள்ளது. இதற்கு ஏற்ப சென்னை மாமன்ற கூட்டத்தில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த வலியுறுத்தப்பட்டது.

ஒரு வார்டில் பத்து இடங்களில் கிராமங்களில் நடப்பது போன்று ஏரியா சபை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வார்டு 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 10 நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் நபர் அந்தப் பகுதியில் உள்ள பிரச்சனைகளை மாநகராட்சி மன்ற உறுப்பினர் கவனத்திற்கும் அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு செல்லலாம்.

அந்த பத்து நபர்கள் தலைமையில் ஏரியா சபை கூட்டம் அந்தந்த பகுதியில் நடைபெறும் இந்த கூட்டங்களில் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினரும் அந்தப் பகுதியில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் மின்சார துறை அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். இதற்கு செலவினமாக மாநகராட்சி சார்பில் வருவாய் ரூபாய் 5000 வழங்கப்படுகிறது..

அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் இது போன்ற கூட்டங்கள் நடக்கிறது உங்களது குறைகளை கூறுங்கள். அதிகாரிகள் நேரடியாக தீர்த்து வைப்பார்கள் என முன்கூட்டியே விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இதனால் அந்த தெருவில் கூட்டங்கள் நன்றாக கூடுகிறது.

பெண்கள் கைகளில் மைக்குகள் கொடுக்கப்படுவதால் சரமாரியாக புகார்களும் குற்றச்சாட்டுகளும் அடுக்குமொழியில் வருகின்றன. அதற்கு அதிகாரிகள் திணறினாலும் பதில்கள் சொல்லி சமாளிக்கின்றனர். தொடர்ந்து இது போன்ற ஏரியா சபை கூட்டங்கள் நடைபெற்றால் மிக நன்றாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

திருவொற்றியூர் காலடிப்பேட்டை பன்னிரண்டாவது வார்டு ராமானுஜம் நகரில் ஏரியா சபை கூட்டம் ஏரியா சபை தலைவர் ருத்ரமூர்த்தி தலைமையில் மாமன்ற உறுப்பினர் வீ. கவி கணேசன் முன்னிலையில் நடைபெற்றது மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதி பொது நல ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் தரப்பில் கொசு மருந்து அடித்தல் வீடுகளில் மருந்துகள் மாத்திரைகள் வழங்குதல் மழைநீர் தேங்குதல் பக்கத்து வீட்டு சண்டைகள் மின்சார பிரச்சனைகள் சாலை பழுது பார்த்தல் வீட்டு வரி என பல்வேறு பிரச்சனைகளை அப்பகுதி மக்களும் பெண்களும் எடுத்துக் கூறினார்கள். ஒரு சிலர் மாமன்ற உறுப்பினரின் பணியை பாராட்டியும் பேசினர் அரசியல் சார்பற்று நடைபெற்ற இவ்விழாவில் ஆரோக்கியமான விவாதங்களும் நடைபெற்றன.

முன்னதாக பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க பறையிசை இசைக்கப்பட்டு மாநகராட்சி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது.

Exit mobile version