சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்திருக்கின்ற பேட்டியில் தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வலி மண்டல மேலடுக்கு சுழற்சி தற்சமயம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
நிலப் பகுதிக்கும், கடல் பகுதிக்கும், இடையே காற்றின் வேகத்தில் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்பட்டதன் காரணமாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வளராமல் அப்படியே நீடித்து வருகிறது.
வளிமண்டல சூழ்ச்சியின் காரணமாக நாளை முதல் மறுநாள் வரையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது இன்று முதல் நாளை காலை ௮.30 மணி வரையிலான காலகட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் 20 சென்டிமீட்டர் மழை வரையில் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மதுரை, புதுக்கோட்டை, தேனி மற்றும் தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது .நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.