Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு வாக்குவாதம்-அதிமுக கவுன்சிலர் தரதரவெனெ இழுத்து வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு! 

#image_title

அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு வாக்குவாதம்-அதிமுக கவுன்சிலர் தரதரவெனெ இழுத்து வெளியேற்றப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு! 

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் அதிமுக கவுன்சிலருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அதிமுக கவுன்சிலரை தரதரவெனெ இழுத்து வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிதா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசியதாவது.

தூத்துக்குடி மாநகர முழுவதும் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது ரூபாய் 9 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் ரூபாய் 15-கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சாலை பணிகளும் விரைவில் தொடங்கும். மேலும் தூத்துக்குடியை தூய்மையான நகரமாக மாற்றுவதற்கு பணிகள் நடந்து வருகிறது. பசுமை நகரமாக மாற்ற சாலைகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. பொதுமக்களும் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். பின்னர் கூட்டத்தில் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக உறுப்பினர் மந்திர மூர்த்தி எழுந்து “தமிழக அரசு கொண்டுவந்துள்ள மதுபான திருத்த விதிகளை கண்டிக்கிறோம். திருமண மண்டபங்கள் விளையாட்டு மைதானங்களில் மதுபான செய்வதையும், தொழிலாளர் வேலை சட்டம் 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக மாற்றுவதை கண்டிக்கும் முத்திரைத்தாள் கட்டணம் உயர்வை கண்டித்தும் கிராம நிர்வாக அதிகாரி கொலை கண்டித்தும் தூத்துக்குடியில் அனுமதி இல்லாமல் நடந்து வரும் டாஸ்மார்க் பார்களை கண்டித்து அதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை அகற்றுவதை கண்டிக்கும் வன்மையாக கண்டித்து பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். வார்டு குறைகளை பற்றி பேசாமல் எதையோ பேசுகிறார் என்றனர். இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன்,சுரேஸ் உள்ளிட்ட கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தியை சட்டை பிடித்து தரதரவெனெ இழுத்து வெளியே தள்ளினர் இதனால் தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version