தலைக்கும் தளபதிக்கும் ஏற்பட்ட வாக்குவாதம்!! வீண் சண்டை எதுக்குப்பா??
ஆரம்ப காலத்திலிருந்தே முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித்குமார் மற்றும் விஜய் அவர்களுக்கு உலக அளவில் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது. எப்பொழுதும் அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் திரையரங்குகளுக்கு வரும் நேரத்திலும் பெருமளவு கொண்டாட்டத்தை ஏற்படுத்துவார்கள். அஜீத் குமாரின் ரசிகர்களா இல்லை விஜய் ரசிகர்கள் என்ற போட்டி ஆரம்பித்தது. காலப்போக்கில் நடிகர் அஜீத் குமாரை தல என்றும் நடிகர் விஜயை தளபதி என்றும் அன்புடன் அழைத்து வந்தனர். மேலும் இவர்களின் படம் திரையரங்குகளுக்கு வந்தாலே பெரிய திருவிழா போல் கொண்டாடுவார்கள். சில சமையத்தில் தலையா? தளபதியா? என்ற போட்டியும் ஏற்படும். ஆரம்ப காலத்தில் தல மற்றும் தளபதி புகழ்பாடவே அவர்களின் ரசிகர்கள் இவ்வாறு போட்டி போட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று விஜய் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. விஜய் அவர்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு ரோயல் ராய்ஸ் என்ற சொகுசு காரினை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்தார். மேலும் அந்த காருக்கு கட்ட வேண்டிய வரியினை தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த மனு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அது குறித்து நீதிபதி பேசியது சமூக செயல்பாடுகளில் ஈடுபடும் நடிகர்களே வரி கட்ட தள்ளுபடி கேட்டாள் உங்களை ரியல் ஹீரோவாக நினைத்து கொண்டிருக்கும் இளம் தலைமுறையினர்களும் இதைத் தான் கற்றுக் கொள்வார்கள். நீங்க ரீல் ஹீரோவாக இருக்காமல் ரியல் ஹீரோவாக இருங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் தள்ளுபடி செய்ததற்காக தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் நன்கொடையாக வரும் இரண்டு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டார். இந்த தகவல் வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதை தொடர்ந்து டுவிட்டரில் வரிகட்டுங்க விஜய் என்ற ஹஸ்டிராக்கை அஜீத் ரசிகர்கள் ட்ரெண்டாகி வந்தனர். இதற்கு விஜய் ரசிகர்கள் விஜய்க்கு ஆறுதல் கூறும் வகையில் வி சப்போர்ட் விஜய் என்ற ஹஸ்ட் டிராக்கை ட்ரெண்டாக்கி வந்தனர். இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் கடனை அடையுங்கள் அஜித் என்ற ஹஸ்ட்டிராக்கை உருவாக்கி வருகின்றனர். இதனால் ஆரம்பத்தில் பொழுது போக்குக்காக ஆரம்பித்த தலையா தளபதியா என்ற போட்டி தற்போது ரசிகர்களிடையே வாக்குவாதத்தில் முடியுமாறு உருவாகியுள்ளது.