மேஷம் ராசி – இன்றைய ராசிபலன் !! கடமை உணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
138

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன் !! கடமை உணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கடமை உணர்ச்சி அதிகரிக்கும் நாள். நிதி அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளதால் கவலை கொள்ள தேவையில்லை. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது பாச மழை பொழிவார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றங்கள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக உங்கள் ஆற்றல் அதிகரிப்பதால் சக வியாபாரிகள் உங்களின் ஆலோசனையை கேட்டு ஓடி வருவார்கள். கொடுக்கல் வாங்கல் மிகச்சிறப்பான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு கடமை உணர்ச்சி மேலோங்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எந்தவிதமான குழப்பமும் இன்றி செயல்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகளை நீங்கள் பெறலாம். அரசியல்வாதிகள் அமைதியாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை பற்றி யோசிப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.