மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு நன்மை அளிக்கும் நாள்!

0
131

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு நன்மை அளிக்கும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். மேஷம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சூழ்நிலைகளை சராசரியாகவும் பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம். இன்றைக்கு உங்கள் நாள் உற்றார் உறவினர்கள் மூலம் உங்களுக்கு நன்மை அளிக்கும் நாளாக உள்ளது. நிதி இன்று ஓரளவுக்கு சமநிலையில் உள்ளது.

கணவன் மனைவி இடையே ஒற்றுமைகள் இன்று நன்றாக உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெறுவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பணியிட மாற்றம் கிடைக்கலாம். தொழில் வியாபாரங்கள் தொடர்பாக பயண வாய்ப்பு மேம்படுவதால் புதிய ஒப்பந்தங்கள் அருமையாக வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் எந்த ஒரு குழப்பமும் இன்றி அருமையாக செயல்படும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு பணியிட மாற்றம் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் வீடு கலை கட்டி இருப்பதை கண்டு மகிழ்வார்கள்.
நண்பர்கள் உறவினர்கள் இன்று அனுகூலமாக இருப்பார்கள். உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இன்று உங்கள் உதவி கேட்டு வரலாம்.

அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு உயர பெறும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் இன்று வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சி அடைவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் இன்று உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஆடையை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.