மேஷம் – இன்றைய ராசிபலன்! அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள்!!
மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியுடன் செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திர பகவானும் ராகு பகவானும் இருப்பதால் குழப்பங்கள் வந்து சேரும் என்பதால் அமைதியாக இருக்க வேண்டும். நிதி அனுகூலமாக இருக்கும்.
கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் எழலாம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் கோபத்தை காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் இழுபறி ஆகும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும்.
உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வீண் அழைச்சல் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் எல்லாம் என்பதால் கூடுமானவரை கவனமாக இருப்பது அவசியம்.
அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.