மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயணங்களின் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள்!

0
98

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயணங்களின் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயணங்களின் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள். குடும்ப உறவு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி உறவு சிறப்பாக உள்ளது.

பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் உருவாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்களை மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உற்றார் உறவினர் வருகையால் இல்லம் கலைகட்டி இருப்பதைக் கண்டு மனமகிழ்ந்து போவார்கள். உடல் ஆரோக்கியத்திற்காக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் ஜெயிப்பார்கள். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும். இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.