மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் குழப்பமும் தெளிவும் உண்டாகும் நாள்!!
மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் குழப்பமும் தெளிவும் உண்டாகும் நாள். மாலை வரை பஞ்சமஸ்தானம் ஆகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் உலா வருவதால் குழப்பமும் மாலைக்குப் பிறகு சந்திர பகவான் ஆறாம் இடத்திற்கு வருவதால் தெளிவான பாதையில் செல்வீர்கள். குடும்ப உறவுகளுக்கு அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவியிடம் சிறு சிறு ஊடல்கள் இருந்தாலும் குடும்ப ஒற்றுமை குறையாது.
வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனம் அவசியம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காப்பது மிகவும் அவசியம். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில அனுபவங்களை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு மாற்று மருத்துவம் கை கொடுக்கும்.
மாணவ மாணவிகள் கல்வியில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் சற்று காலதாமதம் ஆகலாம்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.