அரியலூர்; பள்ளி மாணவி ஒருவர் புகார், உடனே மூடப்பட்ட டாஸ்மாக்!!

0
113

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் நகரில் இருக்கும் ஆர் சி நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடை ஒன்று கடந்த 2003ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையை நாள் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு மிகவும் தொந்தரவு ஏற்பட்டு உள்ளது.

அங்கே குடித்துவிட்டு ரகளை செய்யும் குடி மகன்களால் மாணவிகள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து., அப்பள்ளியில் படிக்கும் மாணவி இளந்தென்றல் மற்றும் அவருடைய சகோதரர் இருவரும் இந்த டாஸ்மாக் கடையை எப்படியாவது மூடி விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்க இருப்பதால் ஒரு இந்த பள்ளியை மூட வழி செய்ய வேண்டும் என்று அவர்கள் கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி இந்த கடையை மூட உத்தரவிட்டார்.

இதன்பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செல்வராஜ் இந்த கடையை மூடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். அத்துடன் கடையில் இருந்த மது பானங்களை பெரம்பலூரில் இருக்கும் கிடங்குக்கு லாரிகள் மூலம் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக பள்ளி மாணவி இளந்தென்றல் மகிழ்ச்சி அடைந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக முதன்மை செயலாளர் இறையன்பு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் சிவசங்கர் ஆகியோருக்கு மாணவர்கள் நன்றியை சமர்ப்பித்துள்ளார்.

மாணவ, மாணவிகள் அளித்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் கடையை மூட அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.