Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடிச்சது ஜாக்பாட்… அடுத்தடுது 2 இந்தி படங்களில் ஹீரோவான அர்ஜுன் தாஸ்

அடிச்சது ஜாக்பாட்… அடுத்தடுது 2 இந்தி படங்களில் ஹீரோவான அர்ஜுன் தாஸ்

அர்ஜுன் தாஸ் அடுத்தடுத்து இரண்டு இந்தி படங்களில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான வில்லன் அர்ஜுன் தாஸ். இவர் திரை உலகிற்க்கு வந்த ஆரம்ப காலங்களில் இவரின் தோற்றம் மற்றும் இவரின் குரல் வளத்திற்காக இவரை பலர் கேலி செய்து உள்ளனர். அதையெல்லாம் பெரிதாக எடுத்டுக் கொல்லாத அர்ஜுன் தாஸ் கைதி திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானர். அத் திரைப்படத்திலிருந்து அவர் வேற லெவல் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும்.

பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் அர்ஜுன் தாஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது அர்ஜுன் தாஸ் வசந்தபாலன் அநீதி என்ற படத்தில் கதாநாயகான நடித்து முடித்துள்ளார். லோகேஷின் சமீபத்தைய படமான விக்ரம் திரைப்படத்திலும் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் இந்தியில் உருவாகும் அங்கமாலி டைரீஸ் மலையாள படத்தின் ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் மணிரத்னத்தின் உதவியாளர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகும் படத்திலும் கதாநாயகனாக நடித்து வருகிறாராம்.

Exit mobile version