Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ஜூன் பட நடிகை!!! அட இவங்க ரெண்டு பேரும் கூட இருக்காங்களா!!!

#image_title

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ஜூன் பட நடிகை!!! அட இவங்க ரெண்டு பேரும் கூட இருக்காங்களா!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் நடிகர் அர்ஜூன் நடித்த படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தீயாக பரவி வருகின்றது. மேலும் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் ரெண்டு பேரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தொடங்கவுள்ளது. வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கவுள்ளார். வழக்கத்திற்கு மாறாக 7வது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை இரண்டு வீடுகள் இருப்பது அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் பரவி வருகின்றது. அந்த வகையில் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய மௌனராகம் 2 சீரியல் நடிகை ரவீனா தாஹா, பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த நடிகை ரித்திகா, மாகாபா ஆனந்த், பப்லு பிருத்திவிராஜ், குக்வித் கோமாளி நவீனா ஆகியோரது பெயர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில் இந்த பட்டியலில் மேலும் மூன்று பேருடைய பெயர்கள் சேர்ந்துள்ளது.

நடிகர் எஸ்ஜே சூரியா அவர்களின் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளியான அன்பே ஆருயிரே திரைப்படத்தின் மூலமாக நடிகை மீரா சோப்ரா தமிழ் சினிமா மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் நடிகர் பிரசாந்த் நடித்த ஜாம்பவான், லீ ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து நடிகை மீரா சோப்ரா அவர்கள் பிரபலமானார்.

நடிகர் அர்ஜூன் நடிப்பில் வெளியான மருதமலை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்பொழுது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகை மீரா சோப்ரா அவர்கள் தமிழில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

அதே போல விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த ரக்சன் அவர்களும் தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் இருந்த ஜாக்குளின் அவர்களும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளை இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது.

Exit mobile version