மீண்டும் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து! தீவீர தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர்!
சில மதங்களுக்கு முன்பு தான் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்றது.அந்த விபத்து இந்திய இராணுவத்தையே உலுக்கிய சம்பவமாக காணப்பட்டது.குன்னூரில் நடைபெற்ற விபத்தில் இராணுவ படைத்தளபதி அவரது மனைவி மற்றும் 13 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.முப்படை தளபதி பிபின் ராவத் தனது மனைவி மற்றும் இதர இராணுவ அதிகாரிகளுடன் நஞ்சப்பா சத்திரம் என்ற பகுதியில் செல்லும்போது எதிர்பாரா விதமாக அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
சம்பவ இடத்திலேயே முப்படை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் இதர இராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்திய விமான படை பயிற்சி மைய தலைவர் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டது.அவ்வாறு தனிப்படை குழு அமைத்து விசாரணை செய்ததில் மோசாமான வானிலையே விபத்துக்கு காரணம் என்று கூறினர்.மேலும் ஹெலிகாப்டரில் எந்தவித கோளாறுகளும் இல்லை என்று தெரிவித்தனர்.
இந்த விபத்திலிருந்தே மீளதா சூழலில் தற்போது காஷ்மீரில் இதுபோன்ற விபத்து தற்பொழுது நடைபெற்றுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் குரேஸ் செக்டாரில் ,பரௌம் என்ற பகுதி உள்ளது.அந்த பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா வகை ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரும் வானிலை மோசமான சூழலில் இருந்ததால் விபத்துக்குள்ளானது என கூறுகின்றனர்.மேலும் ஹெலிகாப்டரில் பயணித்தவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.மேலும் விபத்து குறித்து விரிவான அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.