போரை உடனே நிறுத்துங்கள்! ரஷ்ய அதிபருக்கு கோரிக்கை வைத்த ஹாலிவுட் நடிகர்!

0
120

உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே கடந்த 24ம் தேதி தொடங்கியது 20 நாட்களை கடந்தும் இந்த போர் நடைபெற்று வருகிறது.ராணுவ பலத்தில் உச்சம் தொட்டிருக்கும் ரஷ்யா உக்ரைனின் ராணுவத்தை துவம்சம் செய்து வருகிறது. உக்ரைன் நாட்டு ராணுவத்தில் சுமார் 19 லட்சம் வீரர்கள் மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது ஆனால் ரஷ்ய ராணுவத்தில் 31 லட்சம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைனை பல முனைகளிலிருந்தும் ரஷ்யா தாக்கி வருகிறது ரஷ்யாவின் ராணுவ படைகள் உக்ரைனின் ராணுவ நிலைகளை துவம்சம் செய்து வருகிறது.

அத்துடன் பல முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியிருக்கிறது ஆனால் உக்ரைனின் தலைநகரை கைப்பற்றுவதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது ரஷ்ய ராணுவம். இருந்தாலும் தலைநகருக்குள் நுழைய விடாமல் உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகரும், குடியரசுக் கட்சியைச் சார்ந்த கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் இவர் உக்ரைன் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் போர் தொடர்பாக ரஷ்ய மக்களுக்கு ரஷ்யாவில் தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் மூலமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த வீடியோவில் ரஷ்ய மக்களுக்கு அவர் வெளியிட்டிருக்கின்ற உருக்கமான பதிவில் தெரிவித்திருப்பதாவது, இன்று நான் உங்களிடம் பேசுகின்றேன் ஏனென்றால், உலகில் நடைபெறும் பல உண்மை சம்பவங்கள் உங்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயங்கரமான விஷயங்கள் இன்னும் அநேகமிருக்கின்றது என தெரிவித்திருக்கிறார்.

ரஷ்ய மக்களின் பலம் எனக்கு எப்போதுமே விவேகத்தை வழங்கி வருகிறது. அதன் காரணமாக, தான் உக்ரைனில் நடைபெற்ற போரை பற்றிய உண்மை சம்பவங்களை சொல்ல நீங்கள் அனுமதிப்பியர்கள் என்று நான் நம்புகிறேன். ரஷ்யா தான் இந்த போரை ஆரம்பித்தது இது ரஷ்ய மக்களின் போர் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் இதற்குப் பின்னர் ரஷ்ய ராணுவ படையை சார்ந்த வீரர்களுக்கு அவர் விடுத்த்திருக்கின்ற வேண்டுகோளில் இது சட்டவிரோதமான போர், இது உங்கள் முன்னோர்கள் ரஷ்யாவை காப்பதற்காக நடத்திய போர் அல்ல என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த போரை நீங்கள்தான் ஆரம்பித்தீர்கள், நீங்கள் இந்தப் போரை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் இந்த போரை உங்களால் நிறுத்த முடியும் என்று அவர் விளாடிமிர் புட்டினிற்கு மறைமுகமாக கோரிக்கை விடுத்திருக்கிறார்.