Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘ஆரோக்கிய சேது’ இல்லாவிட்டால் அபராதம்!

‘ஆரோக்கிய சேது’ இல்லாவிட்டால் அபராதம்!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருவதால், கரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க, ‘ஆரோக்கிய சேது’ செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதில் கரோனா வைரஸ் தொற்று உடையவர்களுடன் நாம் தொடர்பில் இருந்தோமா என்ற விவரத்தை இந்த செயலி தெரிவிக்கும்.அதன் மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். இந்தியாவில் இனி தயாரிக்கவிருக்கும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களிலும் ‘ஆரோக்கிய சேது’ கண்டிப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு ஸ்மார்ட் ஃபோன்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், டில்லி அருகிலிருக்கும் நொய்டாவில் ‘ஆரோக்கிய சேது’ பயன்படுத்துவது அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து நோய்டா சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் அகிலேஷ் குமார் “நொய்டாவில் வசிப்போர் ஸ்மார்ட்போனில் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்யாதவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.” என தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டத்தின்படி ரூ.1000 அல்லது 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நொய்டாவைத் தொடர்ந்து மற்ற நகரங்களிலும் ‘ஆரோக்கிய சேது’ அத்தியாவசியமாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Exit mobile version