Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபர் கைது!

#image_title

நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த நபர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனசரகதிற்கு உட்பட்ட பனங்காட்ட்டேரி வனப்பகுதியில் ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பாதுகாக்கப்பட வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த திருப்பதி என்பவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.

அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், டார்ச் லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற திருப்பதியை கைது செய்து ஆம்பூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version