Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிமுக ஆட்சியில் சாலையில் நடந்து சென்றாலே கைது: அமைச்சர் ரகுபதி பதிலடி!..

#image_title

அதிமுக ஆட்சியில் சாலையில் நடந்து சென்றாலே கைது: அமைச்சர் ரகுபதி பதிலடி!..

சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டசபை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நேற்று நடைபெற்ற நிலையில் அதிமுக உறுப்பினர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இருக்கை விவகாரம் முடிவுக்கு வந்தது. சபாநாயகர் அப்பாவு அதிமுக துணை தலைவர் இருக்கையில் ஆர்பி உதயக்குமாருக்கு ஒதுக்கியும் ஓ பன்னீர் செல்வத்துக்கு இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கியும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் நடக்கும் தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு உள்ளிட்ட இரண்டு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதனை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது அதிமுக நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு கூட நீதிமன்றத்திற்கு சென்று தான் அனுமதி பெற வேண்டி உள்ளது என குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சராக ரகுபதி அதிமுக ஆட்சியில் திமுக உறுப்பினர்கள் சாலையில் நடந்து சென்றாலே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கூறினார்.

Exit mobile version