தமிழ்நாட்டில் அஞ்சல் நிலையங்களே டார்கெட்., டாலரை ரூபாயாக மாற்றுவதாக கூறி ஆயிரக்கணக்கில் திருடிய ஈரான் தம்பதியினர் கைது.
ஈரான் நாட்டை சேர்ந்த கூதர்சி மஹ்தி (36) மற்றும் அஹ்மதி மினோ (39) ஆகிய இருவரும் கனவன் மனைவி இவர்கள் கடந்த ஜூலை மாதங்களுக்கு சுற்றுலா விசா பெற்றுக்கொண்டு இந்தியாவில் டெல்லி மாநிலத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றி வந்துள்ளனர்.
தொடர்ந்து., இருவரும் கையில் டாலரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் பல்வேறு அஞ்சல் நிலையங்களுக்கு சென்று டாலரை இந்திய பணமாக மாற்றி வந்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த மாதம் அருப்புக்கோட்டை., மதுரை மற்றும் நேற்று முன்தினம் பெரம்பலூர் உள்ளிட்ட 3 இடங்களில் டாலர் மாற்றுவதாக கூறி அஞ்சல் நிலைய காசாளரை திசை திருப்பி பணத்தை திருடி சென்றுள்ளனர்.
அருப்புகோட்டையில் உள்ள தபால் நிலையத்தில் சுமார் 84 ஆயிரம் ரூபாயும்., மதுரை T.கல்லுப்பட்டி அருகே உள்ள T.குண்ணத்தூரில் உள்ள தபால் நிலையத்திலிருந்து சுமார் 24,800 ரூபாயும் திருடி உள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களுக்கும் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் என்னும் இடத்தில் உள்ள தபால் நிலையம் ஒன்றில் இரண்டு வெளிநாட்டவர்கள் டாலரை இந்திய பணமாக மாற்ற வந்தவர்களை,சந்தேகத்தின் பெயரில் பிடித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் அஞ்சல் நிலைய ஊழியர்கள் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் இந்த 2 பேர் இதேபோல் மதுரை மற்றும் அருப்புக்கோட்டையில் செயல்படும் அஞ்சல் நிலையத்தில் காசாளரை திசை திருப்பி திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஈரான் நாட்டைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரையும் மதுரை T.கல்லுப்பட்டி போலீசாரிடம் பெரம்பலூர் போலீசார் ஒப்படைத்தனர்.
T.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் வெளிநாட்டு தம்பதியினரின் Q-பிரிவு மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருட்டில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது. குற்றவாளிகள் வெளிநாட்டவர் என்பதால் இந்திய வெளியுறவுத்துறை சட்ட திட்டத்தின்படி அந்த தம்பதியினரை கைது செய்து இன்று சென்னை புழல் சிறையில் அடைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.