மூட்டு வலியைப் போக்கும் எள்ளுத்துவையல் – சுவையாக செய்வது எப்படி?

0
94
#image_title

மூட்டு வலியைப் போக்கும் எள்ளுத்துவையல் – சுவையாக செய்வது எப்படி?

எள்ளு விதைகளில் அதிகமாக மக்னீசியம்  இருக்கிறது. இதனால், எள்ளுவை நாம் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள ரத்த அழுத்த நோயை குறைக்க உதவி செய்யும். எள்ளின் இலைகளை கசக்கி அதன் சாரை முகத்தி தடவி கழுவினால் முகம் பொலிவு பெறும். மேலும், எள்ளை நாம் சாப்பிட்டு வந்தால், கண் நரம்புகள் பலப்படும். மாமிச உணவு சாப்பிடாதவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவது நல்ல பலத்தை தரும்.

சரி இவ்வளவு நன்மை கொண்ட எள்ளுத் துவையல் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

வெள்ளை எள் – 1  கப்
காய்ந்த மிளகாய் – 10
தேங்காய் துருவல் – 6 ஸ்பூன்

உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – எலுமிச்சை பழ அளவு
கடுகு – சிறிதளவு
பூண்டு – 4 பல்
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில், ஒரு பாத்தித்தை வைக்க வேண்டும். பாத்திரம் சூடானதும் எள்ளை அதில் போட்டு வறுத்தெடுக்க வேண்டும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் உளுத்தம்பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும்.
பின்னர், பூண்டு, காய்ந்தமிளகாய், புளி, தேங்காய் துருவல் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
இதன் பிறகு, சூடு ஆறியதும் மிக்ஸியில் எள் மற்றும் வறுத்த அனைத்து பொருட்கள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக அரைக்க வேண்டும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்தால் சுவையான எள்ளு துவையல் ரெடி.