அதிமுக மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட பிரிவை அடுத்து திமுகவின் கவனமானது சிறிது சிறிதாக மேலிடம் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. பலரும் திமுக மற்றும் பாஜக ரகசிய கூட்டணியில் உள்ளது என கூறியது தற்பொழுது அடுத்தடுத்த நிகழ்வுகள் மூலம் அம்பலமாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஆளுநர் ரவி அழைத்த தேநீர் விருந்துக்கு முதலில் முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்த திமுக, திடீரென்று முதல்வர் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
அவ்வாறு கலந்து கொண்டவர்கள் அண்ணாமலை யிடம் நெருக்கமாக இருந்ததையும் பார்க்க முடிந்தது. இது குறித்து அண்ணாமலையிடம் கேட்ட பொழுது இது வேறு அது வேறு என்று பதிலளித்தார்.அதனையொட்டி கலைஞர் நாணயம் வெளியீட்டில் மத்திய பாஜகவிலிருந்து ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளார். ஆனால் இவர்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸிலிருந்து யாரும் வரவில்லை. இது அனைத்தும் திமுக மற்றும் பாஜக கூட்டணியை வலுப்படுத்த அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல ஏதுவாக உள்ளது.
அதுமட்டுமின்றி திமுகவின் கூட்டணி கட்சிகளிலுள்ள எம்பிகளுக்கு ஜெ பி நட்டா விருந்து வைப்பதும் அடுத்தடுத்து இதை உறுதி செய்ய வைக்கிறது.காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சிகள் சமீப காலமாக ஆளும் கட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறும் பட்சத்தில் கட்டாயம் திமுக பாஜகவுடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளது. அதன் முன் நடவடிக்கையாக தற்பொழுது பாஜக மற்றும் திமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்து வருகிறது.