கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் தசாவதாரம். திரைப்படமானது உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்று பெருமையை தற்போது வரை பெற்று திகழ்கிறது.
திரைப்படத்தில் கமலஹாசன் அவர்கள் 10 வருடங்களில் நடித்திருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வளவு கலை நயங்களுடனும் காட்சிகளின் நுணுக்கங்களுடனும் உருவாக்கப்பட்ட திரைப்படம் தசாவதாரம். திரைப்படம் குறித்து சுவாரசியமான ஒரு தகவலை கமலஹாசன் அவர்கள் பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து நிகழ்ச்சிய ஒன்றில் பேசிய கமலஹாசன் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
தசாவதாரம் திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்த பொழுது கலைஞர் கருணாநிதி அவர்களை சந்திக்க நேர்ந்தது, அப்பொழுது அவர் என்னிடத்தில் என்ன படம் தற்பொழுது எடுத்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டதாக கமலஹாசன் அவர்கள் கூறியிருக்கிறார்.
அதற்கு, சதுப்பு நிலங்கள் அழிந்து கொண்டு வருவதை மையமாக வைத்து பூவராகன் என்று கதாபாத்திரம் அதற்குப் போராடுவதாக கதையை அமைத்துள்ளேன் என்று முழு கதையையும் விளக்கி கூறினேன். அப்பொழுது அவர் இது மக்களுக்கு புரிந்து கொள்ள கடினமாக இருக்கும். எனவே மணல் கொள்ளை குறித்து படமெடு என்று கூறினார் என கமலஹாசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், கலைஞர் கருணாநிதி அவர்கள் சொன்னது போலவே மணல் கொள்ளையை மையமாக வைத்து தசாவதாரம் திரைப்படத்தை உருவாக்கினோம். இத்திரைப்படமானது மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரைப்படமாக உருவானது என்று பெருமைப்பட தெரிவித்திருக்கிறார்.
இவை மட்டுமின்றி, படத்தை பார்த்த கலைஞர் கருணாநிதி அவர்கள், ” எப்படி படம் எடுத்திருக்கிறான் என்று பாருங்கள் ஆங்கில படத்தை போன்று திரைப்படம் அமைந்திருக்கிறது” என்று கூறி தன்னுடைய கன்னங்களை கிள்ளியதாகவும் தெரிவித்திருக்கிறார் கமல்ஹாசன் அவர்கள்.
அதிலும் குறிப்பாக, கமலஹாசனை பற்றி கமலஹாசன் இல்லாத இடங்களில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெருமைப்படுத்தி பேசி இருக்கும் செய்தி தன்னுடைய காதுகளுக்கு வந்து சேர்ந்தது என்றும் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார் நடிகர் கமலஹாசன் அவர்கள்.