கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்… விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

0
102

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்… விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…

 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் அனைவரும் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் தற்பொழுது இந்த முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.

 

இதன் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 20,765 ரேஷன் கடைகளில் உள்ள ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. இந்த முகாம் கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி முதல் ஆகஸ் மாதம் 4ம் தேதி வரை நடைபெற்று வந்தது. இந்த முகாமில் இதுவரை மொத்தமாக 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

 

கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் மாதம் கடந்த 5ம் தேதி தொடங்கியது. இந்த இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

இந்நிலையில் முதல் கட்ட விண்ணப்ப முகாமிலும் இரண்டாம் கட்ட விண்ணப்ப முகாமிலும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 19ம் தேதி, ஆகஸ்ட் 20ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.