Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேனியில் கோலாகலமாக கொண்டாடப்படும் கலைஞர் பிறந்தநாள்! ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை!

தேனியில் கோலாகலமாக கொண்டாடப்படும் கலைஞர் பிறந்தநாள்! ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலை!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியோருக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கத்தமிழ்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு இலவச வேட்டி சேலைகளை பயனாளிக்கு வழங்கி திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினர்.

பேரூராட்சி மன்றத் தலைவர் பால்பாண்டி ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மலர்கொடி சேதுராமன், நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், வசந்தாமூக்கையா,கோமதி ராதாகிருஷ்ணன், இருதயநாத டென்சன், ஜாகீர் உசேன், தேவகி தென்னரசு, முனியம்மாள் திமுக நிர்வாகிகள் பாஸ்கரன்,போர்வாள்அப்பாஸ் மைதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் தாமரைக் குளம் கண்மாய் கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Exit mobile version