Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கலைஞர் கனவு இல்லம்!! மார்ச் 31-குள் கட்டி முடிக்க உத்தரவு!!

Artist's Dream Home!! Order to complete by March 31!!

Artist's Dream Home!! Order to complete by March 31!!

2030 ஆம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, கலைஞர் கனவு திட்டத்தின் படி ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமான பணிகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கலைஞர் கனவு திட்டத்தின் படி, முதற்கட்டமாக ஒரு லட்சம் வீடுகள் ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டு வருகின்றன.ஒவ்வொரு வீட்டிற்கும், 3.50 லட்சம் ரூபாய் அரசால் செலவு செய்யப்பட உள்ளது.இதற்காக, ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், 3,500 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப, தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை அமைக்கப்பட்ட நிலை, பணி முடிந்த பின் என, நான்கு தவணைகளில் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் மானிய நிதி விடுவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் வீடு கட்டம் செலவினை குறைக்கும் வகையில், குறைந்த விலையில் டான்செம் வாயிலாக, சிமென்ட் மூட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இவை மட்டுமின்றி, கட்டுமான கம்பிகளும் ஒப்பந்ததாரர்கள் மூலமாக குறைந்த விலையில் பயனாளர்களுக்கு கிடைக்கும் படி செய்யப்பட்டுள்ளது.

இதற்கான செலவையும் அரசை மானியமாக வழங்குவது குறிப்பிடத்தக்கது.2025 ஏப்ரல் மாதம் ஒரே நேரத்தில் கிரகப்பிரவேசம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு வசதியாக, மார்ச் 31க்குள் கட்டுமான பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுபட்டுஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version