கரும்புள்ளிகள் முதல் கருவளையம் வரை உடனடியாக குணமாக அருகம்புல் வேர் மட்டும் போதும்! 

0
198
Arugula root is enough to instantly heal everything from blackheads to blackheads!
கரும்புள்ளிகள் முதல் கருவளையம் வரை உடனடியாக குணமாக அருகம்புல் வேர் மட்டும் போதும்!
முகத்தில் கரும்புள்ளிகள், கருவளையம், முகப்பரு, முகச்சுருக்கம் போன்று பல வகையான பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகளை குணப்படுத்த தனித்தனியாக சிகிச்சை முறைகள், மருந்துகள், கிரீம் வகைகள் இருக்கின்றது.
சருமத்தில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்னைக்கும் தனிதனியாக சிகிச்சை முறைகளை எடுத்தால் சருமத்தின் ஆரோக்கியம் குறையும். எனவே இந்த பதிவில் அனைத்து விதமான சருமப் பிரச்சனைகளையும் குணப்படுத்தும் ஒரு மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* அருகம்புல் வேர்
* மஞ்சள் தூள்
செய்முறை…
முதலில் அருகம்புல் வேரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த அருகம்புல் வேரை பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் நாம் குளிக்கச் செல்லும் பொழுது இந்த அருகம்புல் விழுதை முகத்தில் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இதை முகத்தில் தேய்த்து குளித்து வந்தால் அனைத்து விதமான சருமப் பிரச்சனைகளும் குணமாகும்.