Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் டிக்கெட் விற்பனையாளர் பணி!! மாதம் ரூ.58,600/- வரை ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

#image_title

அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் டிக்கெட் விற்பனையாளர் பணி!! மாதம் ரூ.58,600/- வரை ஊதியம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.இத்திருக்கோயிலில் காலியாக இருக்கின்ற ‘டிக்கெட் விற்பனையாளர்’ பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 12க்குள் தபால் வழியாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலை வகை: அரசு பணி

நிர்வாகம்: அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில்

பணி: டிக்கெட் விற்பனையாளர்

மொத்த பணியிடங்கள்: டிக்கெட் விற்பனையாளர் பணிக்கென மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: டிக்கெட் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 45க்குள் இருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: டிக்கெட் விற்பனையாளர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் 58,600/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

டிக்கெட் விற்பனையாளர் பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://hrce.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பிறகு அவற்றை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில்,
நாமக்கல்-637001.

கடைசி தேதி: 12-09-2023

Exit mobile version