Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆர்யா எனக்கு தான் புருஷன்! உரிமையோடு பெயரை சேர்த்துக் கொண்ட அபர்ணதி!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட்டான நிகழ்ச்சிதான் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. இதில் பல இளம் பெண்கள் கலந்துகொண்ட ஆர்யாவை திருமணம் செய்ய முயற்சி செய்தனர்.

ஆனால் ஆர்யா எல்லாருக்கும் டிமிக்கி கொடுத்து சாயிஷாவை  கரம் பிடித்தார். அங்கு வந்திருந்த அனைத்து இளம் பெண்களுக்கும் இது ஏமாற்றத்தை அளித்தது. இதற்காகவா இத்தனை நாளா நாங்க இங்கே கிடந்தோம் என்று பீல் பண்ற அளவுக்கு அந்த பெண்களுடன் நிலை மாறிடுச்சு.

அந்த வகையில் ஆர்யாமேலே பைத்தியமாக இருந்த  ஒருவர்தான் தான் அபர்ணதி. கோ கன்டஸ்ட்ண்டுகள் இவர் மீது எந்த ஒரு நல்ல அபிப்பிராயமும் கொண்டிராத நிலையிலும் ஆர்யாவுக்காக கடைசிவரை போராடினார் அபர்ணதி.

தற்போது ஆர்யாவுக்கும் சாயிஷாக்கும் திருமணம் முடிந்தபிறகும் அபர்ணதி ஆர்யா மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது பெயரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது பெயரின் பின்னால் சேர்த்துள்ளார் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‘இன்னொருத்தர் புருஷன் மேல எதுக்குடி நீ ஆசைப்படுற?’ என்று அபர்ணதியை வறுத்தெடுக்கின்றனர் ஆர்யா மற்றும் சாயிஷாவின் ரசிகர்கள்.

Exit mobile version