ஆர்யா நடிப்பில் உருவாகும் கேப்டன்… ரிலீஸூக்கு முன்பே ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்!

0
123

ஆர்யா நடிப்பில் உருவாகும் கேப்டன்… ரிலீஸூக்கு முன்பே ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்!

ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் திரைப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

நடிகர் ஆர்யாவின் மார்க்கெட் தேய்ந்துகொண்டே சென்றபோது ‘சார்பட்டா பரம்பரை ரிலீஸாகி அதை மீட்டெடுத்தது. அதையடுத்து அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் அவர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹாலிவுட் படமான ப்ரிடேட்டர் படம் போல உருவாகி வருகிறது.

இந்த படத்துக்கு டி இமான் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை ஆர்யாவே தயாரிக்கிறார்.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தை தமிழகத்தில் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

இந்நிலையில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே படத்தின் ஓடிடி உரிமையை ஜி 5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.