குக் வித் கோமாளி அஷ்வினின் புதிய முயற்சி!! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

0
177

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கும் சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. உதாரணமாக சிவகார்த்திகேயன், ரியோ ராஜ், மா.கா.ப, லாஸ்லியா, கவின் மற்றும் மேலும் சிலர் ஆவர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பிடித்த ஒருவராக பிரபலமானவர் தான் அஸ்வின். அவர் 2015ம் ஆண்டில் மணிரத்னம் அவர்கள் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ என்கிற கோலிவுட் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டை வால் குருவி’ என்ற படத்தில் தோன்றிய பின் அவரது சினிமா வாழ்க்கை தொடங்கியது. அதனை அடுத்து தற்போது, ​ ”குக் வித் கோமளி சீசன் ” என்ற நிகழ்ச்சியின் மூலமாக அவர் பங்கேற்றார்.

மேலும், அந்த நிகழ்ச்சியில் ரன்னர்-அப் ஆக பட்டம் பெற்றார். இந்த நிகழ்ச்சி மூலமாக அவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர். இதன் காரணமாக அவர் எப்படியும் சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறே அவருக்கு திரைப்படம் வாய்ப்புகள் வர தொடங்கியது.

அஸ்வின் , ரெபா மோனிகா ஜானுடன் ஒரு புதிய ஆல்பம் சாங் நடித்தார்.அந்த பாடல் ‘குட்டி பட்டாஸ்’ எனப்பட்டது. இதன் பின் அவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகினார்.

மேலும், தற்போது அஸ்வின் ”என்ன சொல்லப்போகிறாய்” என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து உள்ளார். இப்படத்தில் இவருக்கு அவந்திகா, தேஜூ அஸ்வினி என்ற இரண்டு ஜோடிகள் உள்ளனர். மேலும், இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ், சுப்பு பஞ்சு, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர்.

இந்த படத்தில் அஸ்வினோடு இணைந்து புகழும் நடிக்க உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்ட ஒரு காமெடி திரைப்படம் ஆகும்.