Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மகளின் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்ட நடிகை அசின்!

சுதந்திர தினத்தையொட்டி தனது மகள் ஆரின் வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை நடிகை அசின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் நமது நாட்டு தேசியக் கொடியை கையில் பிடித்துக்கொண்டு குழந்தை ஆட்டுவது போல மற்றும் தோட்டத்தை சுற்றி ஓடுவது போல இந்த வீடியோ இருந்தது.

 

அதில் அந்த குழந்தை வெள்ளை நிற ஆடை பைஜாமா அணிந்து உள்ளார். முதன் முதலில் தனது மகள் கொடியை அசைக்கும் படம் மற்றும் வீடியோ மற்றும் கொடியுடன் சைக்கிளில் இருக்கும் படங்கள் அனைத்தையும் வெளியிட்டுள்ளார்.

 

 

 

போக்கிரி, சிவகாசி மற்றும் தசாவதாரம் ஆகியவை தமிழில் நடித்துள்ளார். அசின் ஹிந்தியில் ரெடி, கிலாடி 786 மற்றும் ஹவுஸ்ஃபுல் 2 உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார், அதேசமயம், 2016 ஆம் ஆண்டில், அவர் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை மணந்து கொண்டார்.

 

கஜினி பட நடிகையான அசின் தனது மகளின் படங்களை அரிதாகவே பகிர்ந்து கொள்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, அசின் தனது கதக் வகுப்பிற்கு ஆடை அணிந்திருக்கும் படத்தை அசின் பகிர்ந்துள்ளார். ஆரின் அமைதியாக நின்றபோது கைகளைக் கட்டிக்கொண்டு மஞ்சள் நிற மலர் அச்சிடப்பட்ட ஆடை அணிந்த படத்தை பகிர்ந்து இருந்தார்.

Exit mobile version