Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

படுகொலை செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி! குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்த தனிப்படை காவல்துறையினர்!

புதுக்கோட்டைக்கு அருகே ஆடு திருடியவர்களை விரட்டிப் பிடிக்க சென்ற சமயத்தில் திருச்சி நவல்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூமிநாதன்  வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இச் சம்பவம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த சூழ்நிலையில், கொலையாளிகளை பிடிப்பதற்காக 8 தனிப்படைகள் உடனடியாக அமைக்கப்பட்டன. தனிப்படை காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகே மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் திருச்சி மாவட்ட எல்லை பகுதிகளிலும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரையும் தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்திருக்கிறார்கள்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த 10 வயது மற்றும் 17 வயது சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞர் உட்பட 4 பேரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தார்கள். கைது செய்யப்பட்டவர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதோடு இந்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பாக ஒரு கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version