தமிழக சட்டசபை கூடும் நாள் அறிவிப்பு?
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் 6 ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 28-ந் தேதி தொடங்கி ஜூலை 20-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு துறை ரீதியான மானியக் கோரிக்கைகளும் மற்றும் பல்வேறு சட்ட மசோதாவும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.
6 மாதத்திற்குள் சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பதால் அடுத்த மாதம் 6-ஆம் தேதி சட்டசபை கூட்ட படுகிறது இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந்தேதியுடன் முடிந்து புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சிகள் ஜனவரி 6-ந்தேதிக்குள் நடைபெறும் என தெரிகிறது.
மேலும் 12-ந் தேதிக்குள் சபை கூட்டத் தொடரை முடிக்க ஏற்பாடு நடந்து வருவதாக சட்டபேரவை செயலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2-ந் தேதி வந்து விடும் என்பதால் சட்டசபையில் ஆளும் கட்சி-எதிர்க்கட்சியின் விவாதங்கள் அனல் பறக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.