தனிச் சின்னத்திற்கு ஆதரவளித்த துரைமுருகன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

0
137

கூட்டணி கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்தது தொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பதிலளித்திருக்கிறார்.

சட்டசபைத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகிறார்கள். மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, விசிக, சிபிஎம், போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து இருந்தன. மதிமுகவின் கணேசமூர்த்தி, விசிகவின் ரவிக்குமார், ஐஜேகே பாரிவேந்தர் ,கொமதேக சின்ராஜ், போன்றோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி அடைந்தார்கள்.

அதே நேரத்தில், எதிர் வரும் சட்டசபை தேர்தலில் 200 இடங்களுக்கு மேலே வெற்றி பெற வேண்டும் என்று திட்டம் போட்டு அதற்காக மிகத் தீவிரமாக பணி செய்து வருகின்றது எதிர்கட்சியான திமுக. இதன் காரணமாக, நிரந்தரமான சின்ன மற்ற கட்சிகளை சார்ந்த ஒரு குறிப்பிட்ட அளவு வேட்பாளர்களை திமுக தன்னுடைய சின்னமான உதயசூரியன் சின்னத்தில் களம் காண வைக்க முயற்சி செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றிய மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, மதிமுகவின் தனித் தன்மையை பாதுகாக்கும் வகையில், தனி சின்னத்தில் தான் எங்கள் கட்சி போட்டியிடும் என்று தெரிவித்திருந்தார். அதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட டி. கே. புரம் பகுதியிலே மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பின்னர் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கூட்டணி கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடுவது திமுகவிற்கு சாதகமா அல்லது பாதகமா என்ற கேள்வி பத்திரிக்கையாளர்கள் சார்பாக கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த துரைமுருகன், திமுகவில் இடம்பெற்றிருக்கும் கூட்டணி கட்சிகள் அனைத்தும் தனித்தனி கொள்கைகளை உடைய கட்சிகள். எனவே திமுக கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள் தனிச் சின்னம் கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது. அதன் காரணமாக திமுகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடப்போவதில்லை என தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக அவர்களை நிர்பந்தம் செய்யவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.