Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது! தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல்!

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கே எஸ் அழகிரி ஆகியோர் இன்று மாலை சந்திப்பதாக இருக்கிறார்கள்.

சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கின்ற அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் அதிமுக மற்றும் பாஜகவிற்கு இடையே பல பிரச்சனைகள் இருந்து வந்த நிலையிலும் அண்மையில் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அதிமுக கூட்டணியில் பாஜக தொடரும் என்பதை உறுதி படுத்தி விட்டு சென்றார்.

இந்த நிலையிலே திமுகவின் தலைவர் ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று சந்திக்க இருக்கிறார் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீடு சம்பந்தமாக ஸ்டாலினுடன் தினேஷ் குண்டுராவ் மற்றும் கே எஸ் அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

Exit mobile version