பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய உத்தரவு!

0
100

பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதாவது தமிழ்நாட்டில் நோய்த்தொற்று காரணமாக, சென்ற ஒன்றரை வருட காலமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இணையதளம் மூலமாக வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் எடுப்பது என்று தமிழக அரசு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் இணையதள வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் மாணவர்களின் கல்வித் தரம் குறைய ஆரம்பித்திருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் அசைன்மென்ட் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கின்றார். மாணவர்கள் படிப்பதற்கும், ஆசிரியர்கள் கற்றுத் தருவதற்கும், இடைவெளி இருப்பதாக தெரிவதால் அதனை நிவர்த்தி செய்வதற்காகவே அசைன்மென்ட் வழங்கும் திட்டம் செயல்படுத்த படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் விதத்தில் கிரீட்டிங் கார்டு தயாரித்தல், படம் வரைதல் உள்ளிட்டவையும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை எழுதுதல், சுயவிவரக் குறிப்பு வரைதல் போன்ற அசைன்மென்ட்களும் கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது