உதவி பொறியாளர்களுக்கு முதல்வர் கொடுத்த சூப்பர் பரிசு! கடு கடுக்கும் உதவி பொறியாளர்கள்!

0
140

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை ஆகிய துறைகளில் சுமார் 15,000 உதவி பொறியாளர்கள் பணி செய்து வருகிறார்கள். அவர்கள்தான் இம்மூன்று துறைகளுக்குமான அடிப்படை பணிகளை செய்து கொடுப்பவர்கள்.

இந்த உதவி பொறியாளர்களுக்கு சமீபத்தில் கிருஷ்ணன் கமிட்டி அளித்த பரிந்துரையின் பெயரில், ஒரு பரிசை அளித்தருக்கின்றார் முதல்வரும் நெடுஞ்சாலைதுறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி உதவி பொறியாளர்கள் அந்த பரிசை பற்றி நம்மிடம் தெரிவித்தார்கள்.

தமிழக அரசின் கீழ் பணியாற்றும் உதவி பொறியாளர்களுக்கு திமுக ஆட்சிக்காலத்தில் முதல்வர் கருணாநிதி 6வது ஊதிய கமிஷன் படி பேஸிக் 15600 ரூபாய் மற்றும் 5,400 ரூபாய் டி ஏ வழங்கி வந்தார். அதோடு உதவியாளர்களுக்கு ஆர்டிஓ அந்தஸ்தும் அளித்து வந்தார்.

இப்போது 7-வது ஊதிய கமிஷன் படி எடப்பாடி ஆட்சியில் உதவி பொறியாளர்களின் சம்பளம் 9300 ஆக குறைக்கப்பட்டு டிஏவும், 5200 ஆக குறைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் மூலமாக உதவி பொறியாளர்களுக்கு சம்பளம் குறைந்தபட்சம் 10,000 ரூபாயாகவும் அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாயாகவும் குறைக்கப்பட்டு இருக்கின்றது. அதோடு உதவி பொறியாளர்களுக்கு பிடிஓ அந்தஸ்து அளிக்கப்பட்ட இருக்கின்றது. 7-வது ஊதிய கமிஷன் படி உதவி பொறியாளர்களுக்கு சம்பளமும் குறைக்கப்பட்டு அந்தஸ்தும் குறைக்கப்பட்டு இருக்கின்றது.

முதல்வர் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் துறையில் முழுமூச்சாக செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவது உயரதிகாரிகளின் பல உத்தரவுகளை நிறைவேற்றுவது இந்த உதவி பொறியாளர்கள் தான் இப்படி உழைக்கும் பொறியாளர்களுக்கு எடப்பாடி அரசு கொடுப்பது பரிசு சம்பளக்குறைப்பும் ,அந்தஸ்து குறைப்பும், தானா என ஆதங்கம் தெரிவிக்கிறார்கள் உதவி பொறியாளர்கள்.

தமிழக அரசுடைய நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வேளாண் துறைகளில், மொத்தமாக 15 ஆயிரத்திற்கும் அதிகமான உதவி பொறியாளர்கள் இருந்து வருகிறார்கள். இந்த ஊதியக் குறைப்பு, மற்றும் அந்தஸ்து குறைப்பால் ,அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆகவே தமிழக முதல்வர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல கோரிக்கைகள் எழுந்திருக்கின்றது உதவி பொறியாளர்கள் தரப்பில் இருந்து.