Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மின் இணைப்பை வணிக பயன்பாட்டிற்காக மாற்றி தர 15000 லஞ்சம்!! மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது!!

#image_title

மின் இணைப்பை வணிக பயன்பாட்டிற்காக மாற்றி தர 15000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது!!

திருச்சி கம்பரசன் பேட்டை பகுதியில் பகுதியைச் சேர்ந்தவர் காண்ட்ராக்டர் ஒப்பந்ததாரர் வெங்கடேசன், வீட்டின் மின் இணைப்பை வணிக பயன்பாட்டிற்காக மாற்றி தர 15000 லஞ்சம் கேட்ட தென்னூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தான் ராஜேஷ்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத காண்ட்ராக்டர் வெங்கடேசன் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்புத்  துறையினரின் ஆலோசனையின் படி , இன்று லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் 15000 லஞ்சம் பெற்றபோது, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

வணிகப் பயன்பாட்டிற்காக மாற்றித் தர அரசு கட்டணம் ரூபாய் நானூறு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version